1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Corona affected in Chennai increases

உச்சத்தை எட்டும் கொரோனா: திக்குமுக்காடும் தலைநகரம்!

#COVID19
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 2,446 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. 
 
நேற்று தமிழகத்தில் 874 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 20,246 ஆக உயர்ந்துள்ளது. 
 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்துள்ளது பெரும் அதிர்ச்சியான தகவல் ஆகும். மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 874 பேர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 618 பேர் என்பதால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,362 ஆக உயர்ந்துள்ளது. 
 
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 2,446 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் 1,678, திரு.வி.க.நகரில் 1,437, தேனாம்பேட்டையில் 1,500, தண்டையார்பேட்டையில் 1,425, அண்ணா நகரில் 1,143 ஆக பாதிப்பு எண்ணிக்கை உள்ளது.  
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
கொரோனா இறப்பு: ஸ்பெயினை முந்தியது பிரேசில்!!