கொரொனா 3 வது அலை ! எப்போது பரவும் தெரியுமா?
கொரொனா 3 வது அலை உருவாகவுள்ளதாகவும் இது செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் பரவும் என நிதி ஆயோக் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உருமாறிய கொரொனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. அனைத்து மக்களையும் காக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், கொரொனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சினிமா கலைஞர்களுக்கு முன்னணி நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்டோர் தொடர்ந்து உதவிகள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ஊடரங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு கொரொனா முதல் பரவிய நிலையில் சில மாதங்களுக்கு முன் கொரொனா இரண்டாவது அலை பரவியது. இது தற்போது குறைந்துவரும் நிலையில், நிதிஆயோக் உறுப்பினர் வி.கே. சரஸ்வத் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தொழில்துறையின் உதவியாக ஆக்ஸிஜன் விநியோகத்திற்கு கொரொனா 2 வது அலையை சிறப்புடன் எதிர்கொண்டோம். இதனால் கொரொனா பலி எண்ணிக்கை மற்றும் நோய்த்தாக்கம் குறைந்துள்ளது. சில மாதங்களில் கொரொனா 3 வது அலை உருவாகவுள்ளது. இது செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் பரவும் எனத் தெரிகிறது.
இந்த 3 வது அலையை எதிர்கொள்வதற்காக்ஜ நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகலை பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.