திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Modified: சனி, 20 மார்ச் 2021 (07:05 IST)

பொறியியல் படிக்க கணிதம், இயற்பியல் தேவையில்லையா? நிதி ஆயோக் உறுப்பினர் அதிருப்தி

பொறியியல் படிப்பு படிப்பதற்கு கணிதம் மற்றும் இயற்பியல் கட்டாயமில்லை என சமீபத்தில் அறிவித்த அறிவிப்புக்கு நிதி ஆயோக் உறுப்பினர் சரஸ்வத் என்பவர் தனது அதிருப்தியை தெரிவித்து உள்ளார். அவர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினர் இதுகுறித்து தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் 
 
பொறியியல் படிப்புகளில் கணிதம் இயற்பியல் போன்ற படங்கள் முக்கியமானவை. நெகிழ்வுத்தன்மை என்ற பெயரில் பொறியியல் துறையில் நுழையும் மாணவர்களின் தரத்தை குறைப்பது கல்வியின் தரத்தை குறைப்பதற்கு சமம்
 
மாணவர்கள் அடிப்படையில் பொறியியல் கல்வியை கணிதம் மற்றும் இயற்பியல் இல்லாமல் கற்க முடியாது. ஏ.ஐ.சி.டி.இ.யின் இந்த முடிவு வருங்காலத்தில் இன்ஜினியரிங் கல்லூரியில் படிப்பின் தரத்தை பாதிக்கும். எனவே இதுகுறித்து ஏஐடியுசி மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்