1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (09:02 IST)

இனி வீட்டில் இருந்தாலும் மாஸ்க் அணிய வேண்டும் – நிதி ஆயோக் அறிவுறுத்தல்!

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் வீடுகளிலும் மாஸ்க் அணிந்து கொள்ள நிதி ஆயோக் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. ஒரு நாள் பாதிப்பு 3 லட்சத்தை கடந்துள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் முழு நேர, பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுவெளியில் மாஸ்க் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாஸ்க் அணியாவிட்டால் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மக்கள் வீடுகளில் இருந்தாலும் மாஸ்க் அணிய வேண்டும் என நிதி ஆயோக் அறிவுறுத்தியுள்ளது. வீடுகளில் உள்ளவர்களுக்கு கொரோனா இருந்தும் அறிகுறிகள் தெரியாமல் இருந்தால் அது மற்றவர்களுக்கும் பரவ கூடும் என்பதால் முகக்கவசம் அணிவது பாதுகாப்பானது என நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.