புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 8 டிசம்பர் 2021 (14:37 IST)

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - பதபதைக்க வைக்கும் புகைப்படங்கள்!

குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

 
கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து குன்னூர் வெலிங்டன் மையத்திற்கு ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று சென்ற போது காட்டேரி மலைப்பாதை பகுதியில் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. 14 பேர் இந்த விமானத்தில் பயணித்ததாகக் கூறப்படுகிறது. 
 
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் முப்படைத் தளபதி பிபின் ராவத் பயணம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது நிலைமை என்ன என்பது இதுவரை தெரியவில்லை. மேலும் இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மேகமூட்டம் அதிகமாக இருந்ததால் விபத்து நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. ராணுவம் தரப்பிலிருந்து விரிவான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அவை பின்வருமாறு...