1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 8 டிசம்பர் 2021 (13:02 IST)

பேராசிரியர்கள் அறையின் பூட்டை உடைத்த சிபிசிஐடி: சுசில்ஹரி பள்ளியில் பரபரப்பு!

சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமான சுசில்ஹரி சர்வதேச பள்ளியில் உள்ள பேராசிரியர்கள் அறையின் பூட்டை உடைத்து சிபிசிஐடி போலீசார் சோதனை செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை அருகே கேளம்பாக்கம் பகுதியில் உள்ள சுஷில்ஹரி சர்வதேச பள்ளியை நடத்தி வரும் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் சிலர் பாலியல் புகார் கொடுத்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையைத் சிபிசிஐடி போலீசார் சோதனை செய்தனர். இந்த நிலையில் தற்போது பேராசிரியர்களின் அறையின் பூட்டை உடைத்து சோதனை செய்து வருவதாகவும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.