புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 8 டிசம்பர் 2021 (13:11 IST)

குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: விரைந்தது மீட்புக்குழு!

குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: விரைந்தது மீட்புக்குழு!
குன்னூர் அருகே திடீரென ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதை அடுத்து மீட்புக் குழுவினர் அந்த பகுதியை நோக்கி விரைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
குன்னூர் அருகே மலைப் பாதையில் ராணுவ ஹெலிகாப்டர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது அப்போது திடீரென அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியது ஆக தகவல் வெளியாகியுள்ளது. 
 
ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகிய தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் காவல் துறையினர் மருத்துவ குழுவினர் மற்றும் ராணுவ அதிகாரிகள் விபத்து நடந்த சம்பவத்தை நோக்கி விரைந்து உள்ளதாகவும் மீட்பு பணிகள் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
ராணுவ ஹெலிகாப்டரில் இருந்த பயிற்சியாளர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது