திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 11 செப்டம்பர் 2024 (21:12 IST)

சர்ச்சை பேச்சாளர் மகா விஷ்ணுவுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்.! சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி.!!

Maha Vishnu Arrest
மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவை, 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கி இன்று உத்தரவிட்டுள்ளது.  
 
கடந்த சில தினங்களுக்கு முன்பு சைதாப்பேட்டை அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களிடம் பேசிய மகா விஷ்ணு என்பவர், மாணவர்களிடையே அறிவியலுக்குப் புறம்பான மூடநம்பிக்கை கொண்ட கருத்துக்களை பேசி இருந்தார். இதில், மாற்றுத்திறனாளிகளை அவதூறுப்படுத்தும் நோக்கில் கருத்துக்களை தெரிவித்ததாக கூறி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் சைதாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 
 
இந்த புகாரின் அடிப்படையில் கடந்த 7 ம் தேதி ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து சென்னைக்கு திரும்பிய விஷ்ணுவை சைதாப்பேட்டை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட மகாவிஷ்ணு இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மகாவிஷ்ணுவை 7 நாட்கள்  காவலில் எடுத்து விசாரிக்க வேண்டுமென்று  காவல்துறையினர் வலியுறுத்தினர்.   
 
வழக்கை விசாரித்த மேஜிஸ்ட்ரேட் சுப்பிரமணியம் விஷ்ணுவை முறைப்படி கைது செய்து வாக்குமூலம் பெற்றுள்ளீர்கள்? பின்பு எதற்காக 7 நாட்கள் காவல் பாதுகாப்பு கேட்கிறீர்கள்? என போலீசாரிடம் கேட்டுள்ளார். காவல்துறையினர், காவலில் எடுப்பதற்குண்டான 4 காரணங்களைத் தெரிவித்துள்ளனர்.  

 
மகாவிஷ்ணுவை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சைதாப்பேட்டை போலீசார் மகாவிஷ்ணுவை  காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.