குரூப்-4 தேர்வில் கூடுதலாக 480 காலியிடங்கள் சேர்ப்பு.! டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு.!!
குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 காலி பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
கடந்த ஜூன் 9ஆம் தேதி கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 6,224 காலி பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.
தேர்வு முடிவு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், குரூப்-4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி கடந்த வாரம் அறிவித்தது.
இந்நிலையில், அரசின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3) மற்றும் பாரஸ்டர், பாரஸ்ட் வாட்சர், பில் கலெக்டர், உள்ளிட்ட பதவிகளில் கூடுதலாக 480 காலியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, குருப்-4 தேர்வில் காலியிடங்களின் எண்ணிக்கை 6244-லிருந்து 6724 ஆக அதிகரித்துள்ளது.