வழக்கறிஞர் விலகியதால் நானே வாதாடுகிறேன்: நீதிபதியிடம் மகா விஷ்ணு கோரிக்கை..!
சென்னை அசோக் நகர் அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மகாவிஷ்ணு கைது செய்யப்பட்ட நிலையில் அவரது ஜாமின் மனு விசாரணையின் போது திடீரென அவரது வழக்கறிஞர் இந்த வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து இந்த வழக்கில் நானே வாதாடுகிறேன் என நீதிபதியிடம் மகாவிஷ்ணு கோரிக்கை விடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக எழுந்த புகாரை அடுத்து மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர் மீதான வழக்கு விசாரணை இன்று நடந்த நிலையில் மகாவிஷ்ணுவை காவலில் எடுத்து விசாரணை செய்ய சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற இந்த நிலையில் அடுத்த கட்டமாக மகாவிஷ்வின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அவரது வழக்கறிஞர் பாலமுருகன் என்பவர் திடீரென இந்த வழக்கிலிருந்து விலகுவதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து வழக்கறிஞர் விலகியதால் தன்னுடைய வழக்கில் தானே வாதாட உள்ளதாக மகாவிஷ்ணு நீதிபதியுடன் தெரிவித்தார். மேலும் போலீஸ் காவலுக்கு அனுப்பினால் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன் கிடைக்குமா அல்லது நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்படுவாரா என்பது இன்னும் சில நிமிடங்களில் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran