ஐஐடி இயக்குனர் காமகோடிக்கு கோமியம் அனுப்பி போராட்டம்.. திராவிட தமிழர் கட்சியினர் அதிரடி..!
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோமியம் குடித்தால் காய்ச்சல் குணமாகும் என்று ஐஐடி இயக்குனர் காமகோடி பேசியதை அடுத்து, அவருக்கு பெரும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் முதல் சாதாரண பொதுமக்கள் வரை, சமூக வலைதளங்களில் இந்த கருத்துக்கு எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது திராவிட தமிழர் கட்சியினர் ஐஐடி இயக்குனருக்கு தபால் மூலம் கோமியம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோமியம் தொடர்பான காமகோடியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவை தமிழ் திராவிட தமிழ் கட்சியினர் காமகோடிக்கு தபால் மூலம் கோமியம் அனுப்பி வைக்கும் போராட்டத்தை நேற்று தொடங்கினர்.
இதனை அடுத்து, செய்தியாளர்களுடன் பேசிய கட்சியின் ஆதரவாளர்கள், ஐஐடி இயக்குனருக்கு ஆதரவாக பேசியதாக, வானதி சீனிவாசன் மற்றும் தமிழிசை சௌந்தரராஜனுக்கும் கோமியத்துடன் மாட்டுக்கறியையும் அனுப்ப திட்டமிட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, பசுவின் சிறுநீரில் பூஞ்சை, எதிர்ப்பு பாக்டீரியா சி ஆகியவை உள்ளதாகவும், இது குறித்து அறிவியல் கட்டுரைகளை நான் அனுப்புகிறேன் என்றும் ஐஐடி இயக்குனர் காமகோடி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran