கோமியம் குடித்தால் டாஸ்மாக் விற்பனை குறையும்- தமிழிசை சவுந்தரராஜன்
சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் கோமியம் குடித்தால் காய்ச்சல் உள்பட பல நோய்கள் குணப்படுத்த முடியும் என்று கூறிய நிலையில் அவருக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மாட்டு கோமியம் குடிப்பது நல்லது என்றும் கோமியம் குடித்தால் டாஸ்மாக் விற்பனை குறைந்துவிடும் என்று நினைக்கிறார்கள் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாட்டுக்கறி சாப்பிடுகிறார்கள், மாட்டுச் சாணத்தை பயன்படுத்துகிறார்கள், ஆனால் மாட்டு கோமியம் மருந்து என்றால் மட்டும் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள், எதிர்க்கிறார்கள் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
விஞ்ஞான பூர்வமாக ஆய்வு செய்து ஆயுர்வேதத்தில் கோமியம் மருந்து என்று கூறப்பட்டுள்ள நிலையில் கோமியத்தை பயன்படுத்தக் கூடாது என்று பேசுகிறார்கள் என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார்.
மாட்டின் சிறுநீர் என்பது அமிர்த நீர் என்றும் கூறிய தமிழிசை சௌந்தரராஜன், சங்ககால இலக்கியத்தில் மாட்டுச்சாணம் பூசிய முற்றங்கள் சொல்லப்பட்டுள்ளது என்றும் மாட்டுச் சாணத்தில் கிருமி நாசினி உள்ளது என்றால், மாற்று சிறுநீரிலும் கிருமிநாசினி உள்ளதை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் என்றும் மியான்மர் ஆப்பிரிக்க நாடுகளும் அதை ஏற்றுக் கொண்டு உள்ளார்கள் என்றும் அவர் கூறினார்.