திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Modified: ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (00:00 IST)

தொடரும் முறைகேடுகள் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கரூரில் அதிரடி பேட்டி

vijayabashkar
கவர்னரிடம் முறையிடுவது தவிர வேறு வழி இல்லை ! கரூர் மாவட்டத்தில் தொடரும் முறைகேடுகள் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கரூரில் அதிரடி பேட்டி.
 
தமிழக முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிமுக நிர்வாகிகள் என்று ஏராளமானோர் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறையில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து ஐந்தாவது முறையாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் வீடியோ கான்பரன்சில் உள்ளார் என்று கூறியதை அடுத்து எவ்வளவு நேரம் ஆனாலும் சரி, மக்களுக்காக மக்களின் வரிப்பணத்தில் நடக்கும் முறைகேடுகளை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த பின்னரே செல்வோம் என்று கூறியதையடுத்து, சுமார் 30 நிமிடங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கின் முன்பு முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் நின்று கொண்டே இருந்தனர். பின்னர் அழைத்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் குறைகளை கேட்டார், அப்போது கரூர் மாவட்டத்தில் மட்டும் இது நான்காவது முறையாக எங்கள் கட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டதாகவும் நேற்று, தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் இடமும் எதிர்க்கட்சித் தலைவரும் எங்கள் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கலிடத்திலும் மனு கொடுத்துள்ளோம். இது ஐந்தாவது முறையாக தங்களிடம் மனு கொடுக்கின்றோம். போடாத ரோட்டிற்கு திமுக ஒப்பந்ததாரர் ஒருவர் பணம் பெற்றுக்கொண்டு அதை, நாங்கள் ஆதாரப்பூர்வமாக மனு கொடுத்த பின்னர், எங்க நாங்கள் மாட்டிக்கொண்டு விடுவோமோ என்று கூறி காவல்துறையினர் உதவியுடன் 25க்கும் மேற்பட்ட ஜேசிபி கள் கொண்டு தார் சாலைகள் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வருகின்றது. நன்கு உள்ள தார் சாலைகளுக்கு எதற்காக முதலில் தார் சாலைகள் போட்டதாக கூறி ரூபாய் 3.50 கோடி பணம் முறைகேடு செய்துள்ளனர். முறைகேடு செய்ததை மறைக்க, அந்தந்த இடங்களில் மீண்டும் தார் சாலைகள், அதை மாவட்ட ஆட்சியராக நீங்கள் தடுத்து உண்மை நிலை என்ன என்று ஆராய்ந்த பின்னர், பின்பு தார் சாலைகள் போட்டிருக்கலாம், ஆனால் நீங்களும் அதை ஏதும் கண்டு கொள்ளவில்லை என்று கூறியதற்கு, மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், என்னிடம் அதற்கான அதிகாரம் இல்லை, நான் போடப்பட்ட தார் சாலைகளின் தரம் குறித்து வேண்டுமானால் ஆய்வு செய்யலாம், தார் சாலையை போடக்கூடாது என கூறமுடியாது, தங்களது கோரிக்கைகளும் தாங்கள் குறிப்பிட்டுள்ள  முறைகேடுகள் குறித்து, விசாரணை நடத்துவோம், என்று மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கூறியதோடு, மாவட்டத்தில் அதிமுக கவுன்சிலர்களுக்கு நிதி ஒதுக்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன் என்று ஒரு மாவட்ட ஆட்சியர் கூறிய காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் மாவட்டத்திற்கே உயரதிகாரியான மாவட்ட ஆட்சியர் தங்களால் இந்த ஊழலை கட்டுப்படுத்த முடியாதா என்ற அடுக்கடுக்கான கேள்வி கடைகளில் அதிமுக மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம் ஆர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியரிடம் கூறிய பின்னர் மீண்டும் புகாராக ஒரு மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் முன்னாள் அமைச்சரும் அதிமுக கரூர் மாவட்ட செயலாளருமான எம் ஆர் விஜயபாஸ்கர், மாவட்டத்தில் ஏதேனும் குறைகள் இருந்தால் மற்றும் குற்றங்கள் நடந்தால் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கலாம், ஆனால் முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் இல்லை என்று அவரே கூறுகின்றார். பின்னர் நாங்கள் யாரிடம் மனு அளிப்பது, புகார் கூறுவது என்று கேள்வி எழுப்பியதோடு, நேற்று தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்ததாகவும் அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் இன்று மேலும் ஒரு புகார் ஆக மொத்தம் ஐந்து முறை புகார் தெரிவிக்கப்படும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஆகவே, தமிழக கவர்னருக்கு மனு அளிப்பதைத் தவிர வேறு வழி இல்லை, மேலும் இது தொடர்பாக அதிமுக சார்பில் நீதிமன்றம் நாடுவோம் என்றும் உறுதிபட அவர் தெரிவித்தார்