வியாழன், 12 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Bala
Last Modified: புதன், 17 டிசம்பர் 2025 (11:34 IST)

சீமான் கூட நிரூபிச்சிட்டாரு!.. விஜய் ஒன்னுமில்ல!.. இராம சீனிவாசன் நக்கல்!.

vijay
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தொடக்கம் முதலே திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். விழுப்புரம் விக்கிரவாண்டி மற்றும் மதுரை ஆகிய இரண்டு ஊர்களிலும் பெரிய அளவில் மாநாடும் நடத்தப்பட்டது.
 
 
அதில் பல லட்சம் பேர் கலந்து கொண்டனர். அதன்பின் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஒவ்வொரு மாவட்டமாக சென்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியையும் விஜய் நடத்தினார். ஆனால் கரூர் சம்பவத்திற்கு பின் கடந்த இரண்டு மாத காலமாக அந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. இந்நிலையில்தான் வருகிற 18-ம் தேதி ஈரோட்டில் நடக்கவிருக்கும் பொதுக்கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு பேசவுள்ளார். அதற்கான ஏற்பாடுகளை தவெக நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
 
ஒருபக்கம் திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தாலும் பாஜகவை தனது கொள்கை எதிரி என தொடர்ந்து சொல்லி வருகிறார் விஜய். அதனால்தான் அவர் அதிமுக - பாஜக கூட்டணியிலும் இணையவில்லை. 
இந்நிலையில் விஜயின் அரசியல் பிரவேசம் பற்றி கருத்து தெரிவித்த பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் ‘தவெக என்பது சமூக ஊடகத்தில் மட்டுமே செயல்படும் ஒரு கட்சி. 

vijay
 
























களத்தில் பணி செய்ய தொண்டர்கள் இல்லாத ஒரு கட்சி.. தேர்தலில் நின்று வாக்கு சதவீதத்தை நிருபிக்காத ஒரே கட்சி தமிழக வெற்றிக் கழகம்தான்.. நாம் தமிழர் கட்சி கூட அதை நிரூபித்து விட்டார்கள். விஜய்யை பார்க்க கூடிய கூட்டத்தை வைத்து அவருக்கு வாக்குகள் கிடைக்கும் என சொல்ல முடியாது.. விஜய்க்கு கூடியதை விட 20 மடங்கு ஆந்திராவில் சிரஞ்சீவிக்காக கூடினார்கள்’ என்று அவர் பேசியிருக்கிறார்.