1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 20 ஜூன் 2018 (18:06 IST)

சர்வீஸ் தாமதம்; நீதிமன்றத்தை நாடிய வாடிக்கையாளருக்கு புதிய செல்போன் வழங்க உத்தரவு

நெல்லையில் செல்போன் பழுதை உரிய காலத்தில் சரி செய்து தராததால் வாடிக்கையாளருக்கு புதிய செல்போன் மற்றும் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 
நெல்லைச் சேர்ந்த செந்தில் என்பவர் அவரது ஆப்பிள் ஐபோனை பழுது பார்க்கும் மையத்தில் பழுதுநீக்க கொடுத்துள்ளார். பழுது பார்க்கும் மையம் சரிசெய்யாலம் பல்வேறு காரணங்கள் கூறி தட்டிக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது.
 
செந்தில் பலமுறை முறையிட்டும் பழுது பார்க்கும் மையம் உரிய பதில் அளிக்காமல் அலைக்கழித்து வந்துள்ளது. இதனால் செந்தில் மாவட்ட நுவர்வோர் நீதிமன்றத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வாடிக்கையாளருக்கு புதிய செல்போன் மற்றும் நஷ்ட ஈடு ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டு என்று உத்தரவிட்டது.