வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 18 ஜூன் 2018 (15:09 IST)

எஸ்.வி. சேகர் நீதிமன்றத்தில் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட்- நீதிமன்றம் அதிரடி

எஸ்.வி. சேகர் வரும் ஜூலை 12ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகாவிட்டால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என நெல்லை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
பெண் பத்திரிக்கையாளர்களை கொச்சைப்படுத்தும் வகையில் முகநூலில் பதிவு வெளியிட்ட விவகாரத்தில், எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவரை தமிழக போலீசார் இதுவரை கைது செய்யவில்லை.
 
50 நாட்களுக்கும் மேலாக அவர் தலைமறைவாக இருக்கிறார்.  போலீசாருடன் அவர் பாதுகாப்பாக காரில் செல்லும் புகைப்படங்களும், அமைச்சர் குடும்ப விழாக்களில் கலந்து கொண்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில், இவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு இன்று நெல்லை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, எஸ்.வி. சேகர் வரும் ஜூலை 12ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகாவிட்டால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.