செவ்வாய், 18 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: வெள்ளி, 5 செப்டம்பர் 2025 (15:19 IST)

எழும்பூர் ரயில் நிலையத்தில் கட்டுமான பணி! தாம்பரத்திற்கு மாற்றப்படும் திருச்சி, மதுரை ரயில்கள்! - முழு விவரம்!

எழும்பூர் ரயில் நிலையத்தில் கட்டுமான பணி! தாம்பரத்திற்கு மாற்றப்படும் திருச்சி, மதுரை ரயில்கள்! - முழு விவரம்!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடந்து வரும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக பல்வேறு விரைவு ரயில்கள் எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. அவ்வாறாக முதலில் ப்ளாட்பாரம் 1,2,3,4 ஆகியவை சீரமைப்பு செய்யப்பட்டதால் மன்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல விரைவு ரயில்கள் தாம்பரத்திலிருந்து இயக்கப்பட்டு வந்தன. அந்த பணிகள் கடந்த ஆகஸ்டில் முடிவடைந்த நிலையில் மீண்டும் ரயில்கள் வழக்கம்போல எழும்பூரில் இருந்து இயங்கி வருகின்றன,

 

இந்நிலையில் அடுத்தக்கட்டமாக ப்ளாட்பார்ம் 7,8,9 ஆகியவற்றில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் இடம் மாற்றப்பட உள்ளன. 

 

ரயில்வே அறிவிப்பின்படி , எழும்பூர் - திருச்சி இடையே பயணிக்கும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், எழும்பூர் - மதுரை இடையே செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ், எழும்பூர் - திருச்சி எக்ஸ்பிரஸ் 22675, எழும்பூர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் 2 ரயில்கள் என மொத்தம் 5 ரயில்கள் செப்டம்பர் 10 முதல் நவம்பர் 9, 10, 11 வரை தாம்பரத்தில் இருந்தே இயக்கப்படும்.

 

எழும்பூர் - மும்பை இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் 22158 செப்டம்பர் 11 முதல் நவம்பர் 10 வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும். 

 

Edit by Prasanth.K