தொடர்புடைய செய்திகள்
- அதிமுகவிற்கு கூட்டணி அழைப்பு விடுத்த மு.க.ஸ்டாலின்! – 37 கட்சிகளுக்கு கடிதம்!
- தேர்தல் களத்தில் திருநங்கைகளை இறக்கிய கட்சிகள்! – பரபரக்கும் தேர்தல்!
- நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கமல்ஹாசன் பாராட்டு!
- லஞ்சத்தை ஒழிக்க சிசிடிவி கேமரா… வழக்கு தொடர்ந்த நபருக்கு அபராதம்!
- துப்பாக்கிகளை உடனே ஒப்படைக்க வேண்டும்: சென்னை மக்களுக்கு காவல்துறை உத்தரவு!
தமிழ் தேர்வு எழுதினால்தான் காவலர் பணி! – சீருடை பணியாளர் தேர்வாணையம்!
தமிழக காவலர் பணித் தேர்வுகளில் தமிழ் தேர்வில் தேர்ச்சியடைவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தமிழகத்தில் காவலர் பணியிடங்களுக்கான தேர்வுகளை நடத்தி பணி நியமனம் செய்து வருகிறது. சமீப காலமாக தமிழ் வழியில் பயின்றோருக்கு அரசு பணியில் முன்னுரிமை, போட்டித் தேர்வுகளில் தமிழ் தேர்வுக்கு முன்னுரிமை ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் காவலர் பணி தேர்விலும் தமிழ் மொழி தேர்வு சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மற்ற அனைத்து தாள்களிலும் தேர்ச்சியடைந்து தமிழ் தேர்வில் தேர்ச்சி அடையாவிட்டால் காவலராக முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேர்வில் குறைந்தபட்சம் 40 விழுக்காடு மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றால்தான் மற்ற தாள்களின் தேர்ச்சி கணக்கில் கொள்ளப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
