1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Congress Pushes for Erode East Constituency Allocation

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரஸ் முக்கிய தீர்மானம்..!

ஈரோடு
ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்றும், இ.வி.கே.எஸ். இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் அதில் போட்டியிட இருப்பதாகவும் திமுகவிடம் காங்கிரஸ் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மறைந்தார். இந்த நிலையில், அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு அந்த தொகுதியை ஒதுக்க வேண்டும் என இன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா காலமானதை அடுத்து, இ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரும் கடந்த டிசம்பர் மாதம் காலமானார்.
 
தற்போது, இ.வி.கே.எஸ். இளைய மகன் சஞ்சய் சம்பத் இடைத்தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும், அவருக்கு வாய்ப்பு அளிக்க காங்கிரஸ் கட்சிக்கு இந்த தொகுதியை ஒதுக்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அடுத்த மாதம், அதாவது பிப்ரவரி மாதம், டெல்லி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அந்த தேர்தலுடன் சேர்த்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் தேர்தல் நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
சென்னை அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்! பெரும் பரபரப்பு..!