1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. congress party intuc union support to admk

சட்ட மன்றத் தேர்தல் - அதிமுகவுக்கு காங்கிரஸ் தொழிற்சங்கம் ஆதரவு

சட்ட மன்றத் தேர்தல் - அதிமுகவுக்கு காங்கிரஸ் தொழிற்சங்கம் ஆதரவு

காங்கிரஸ் கட்சி
நடைபெற உள்ள தமிழக சட்ட மன்றத் தேர்தலில், அதிமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக  காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கமான ஐஎன்டியுசி அறிவித்துள்ளது.
 

 
இது குறித்து, மதுரையில், ஐஎன்டியுசி மாநில நிர்வாகி  கே.எஸ்.கோவிந்தராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐஎன்டியுசி உறுப்பினர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் பலமுறை கோரிக்கை விடுத்தோம். எங்களது கோரிக்கையை அவர் ஏற்க மறுத்துவிட்டார்.
 
தமிழகத்தில் ஐஎன்டியுசி-க்கு மொத்தம் 7 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், 7 லட்சம் உறுப்பினர்கள் இருந்தும் ஐஎன்டியுசிக்கு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வாய்ப்பு மறுத்து வருகிறது. இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
மேலும், கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் அதிமுக அரசின் செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக உள்ளதாலும், சிறு மற்றும் குறு தொழில் துறையில் பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாலும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
 
 
 
About Writer
K.N.Vadivel
அடுத்த கட்டுரையில்
தேர்தல் ஜூரத்திலும் தொடரும் நீக்கல் லிஸ்ட் - இது அம்மா ஸ்டைல்