செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 3 மார்ச் 2022 (18:59 IST)

கும்பகோணம் நகராட்சிக்கு மேயராகும் ஆட்டோ ஓட்டுனர்!

கும்பகோணம் நகராட்சி மேயர்ப் பொறுப்புக்கு காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள சரவணன் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டுனராக செயல்பட்டு வருகிறார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் திமுக கூட்டணி பல இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் திமுக தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவியை ஒதுக்கியுள்ளது.

இதையடுத்து கும்பகோணம் பகுதியின் மேயராக காங்கிரஸ் கட்சியால் சரவணன் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். எளிமையான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவரான சரவணன் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டுனராக செயல்பட்டு வருகிறார