1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 16 மார்ச் 2021 (21:46 IST)

காங்கிரஸ் கட்சியின் 4 வேட்பாளர்கள் அறிவிப்பு: விளவங்காடு தொகுதியில் விஜயதாரிணி!

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது என்பதும் அதில் 21 தொகுதிகளுக்கு ஏற்கனவே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் மீதி உள்ள நான்கு தொகுதிகளுக்கு சற்றுமுன் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதன்படி வேளச்சேரி தொகுதியில் ஹசான் என்பவரும் மயிலாடுதுறை தொகுதியில் ராஜ்குமார் என்பவரும் குளச்சல் தொகுதியில் பிரின்ஸ் என்பவரும் விளவங்கோடு தொகுதியில் விஜயதாரணியும் போட்டியிடுகின்றனர் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஏற்கனவே விளவங்கோடு தொகுதியில் விஜயதாரணிக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என்றும் அதனால் அவர் பாஜகவுக்கு தாவ வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் விஜயதாரணிக்கு தற்போது சீட் கொடுக்கப் பட்டு அவருடைய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது