திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் மொட்டையடித்த மகிளா காங்கிரஸ் தலைவர்!

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் மொட்டையடித்த மகிளா காங்கிரஸ் தலைவர்!
தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத கட்சியினர் தங்களது அதிருப்தியை தெரிவிக்கும் வகையில் மாற்றுக் கட்சிக்கு செல்வது உள்பட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் 
 
அந்த வகையில் கேரள மாநில மகிளா காங்கிரஸ் தலைவர் ஒருவரும் தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் மொட்டை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநில மகிளா காங்கிரஸ் தலைவர் லகிதா சுபாஷ் என்பவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மொட்டை அடித்துக்கொண்டார் 
 
திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வந்த அவர் தலையை மொட்டை அடித்துக் கொண்டார். நான் வேறு எந்த கட்சிக்கும் செல்ல மாட்டேன் என்றும் மாவட்டத்தில் ஒரு பெண்ணுக்கு காங்கிரஸ் வாய்ப்பு வழங்கும் என்கிற எதிர்பார்ப்பு நடக்கவில்லை எனவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்