ஒபிஎஸ் - பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து மோதல்: அதிமுக பாஜக உறவில் விரிசலா?

ops-pon
Last Updated: வியாழன், 15 பிப்ரவரி 2018 (19:28 IST)
தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது என்ற பொன்.ராதாகிருஷ்ணன் கருத்துக்கு பதிலளித்த ஓபிஎஸ்க்கு மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார்.

 
இன்று அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
தமிழகம் தற்போது அமைதியாக இருப்பதாக பலர் கூறி வருகிறார்கள். ஆனால் அப்படி இல்லை. பயங்கரவாதிகளின் கூடாரமாக தமிழகம் மாறி உள்ளது என்று கூறினார்.
 
இதுகுறித்து ஒ.பன்னிர்செல்வத்திடம் கேட்டபோது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சொல்லி இருப்பது உண்மைக்கு மாறானது. அது ஜமுக்காளத்தில் வடி கட்டிய பொய் என்று கூறினார்.
 
இந்நிலையில் மீண்டும் பொன் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ஜமுக்காளத்தில் கலப்படம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :