ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 14 பிப்ரவரி 2018 (20:26 IST)

என்னுடைய சதத்திற்கு பின்னர் இரு வீரர்களின் தியாகம்: ரோகித் வருத்தம்....

தென்னாப்பிரிக்கா - இந்தியா அணிகள் இடையேயான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்தார் ரோகித் சர்மா. தனது சதத்தை கொண்டாடமல் அமைதியாக இருந்தார். தற்போது இதற்கான காரணத்தையும் கூறியுள்ளார். 
 
போர்ட் எலிசபெத்தில் நடந்த ஐந்தாவது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா ஒருநாள் அரங்கில் தனது 17 வது சதம் விளாச, இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 
 
இந்நிலையில் ரோகித் சர்மா அமைதியாக தனது செஞ்சுரியை கொண்டாடிய ரகசியத்தை தெரிவித்துள்ளார். இந்த செஞ்சுரியை எட்டும் முன், என்னால் 2 பேர் ரன் அவுட்டாகினர். 
 
இந்த தவறை செய்துவிட்டு எப்படி சந்தோஷமாக சதத்தை கொண்டாட முடியும். இதனால் அதை கொண்டாட வேண்டும் என்ற எண்ணமே என் மனதில் இல்லை. தவறை சரி செய்து அணியை ஒரு சிறப்பான ஸ்கோரை எட்ட செய்ய வேண்டும் என்பதே எனது எண்ணமாக இருந்தது என தெரிவித்துள்ளார்.