செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 14 பிப்ரவரி 2018 (11:27 IST)

ஒரே கண்ணசைவில் இண்டர்நெட்டை கலக்கிய பிரியா மீது போலீஸ் புகார்

சமீபத்தில் வெளியான 'ஒரு ஆடார் லவ்' என்ற படத்தில் இடம்பெற்ற நடிகை பிரியா வாரியரின் கண்சிமிட்டும் காட்சி இண்டர்நெட்  உலகையே கடந்த சில நாட்களாக ஆட்டிப்படைத்து வருகிறது. ஒருசில வினாடிகள் அடங்கிய இந்த டீசரின் வீடியோ பல மில்லியன் பார்வையாளர்களை தாண்டியுள்ளது.

இந்த நிலையில் பிரியாவாரியர் மீது ஐதரபாத் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. இவர் நடித்த 'ஒரு ஆடார் லவ்' என்ற படத்தில் இடம்பெற்ற பாடலான மாணிக்க மலராய பூவி’ என்றா பாடல் வரிகள் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்துவதாகவும், இதுகுறித்து பிரியா வாரியர் மீதும், படக்குழுவினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐதராபாத் நகர காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

இந்த புகாரை காவல்துறையினர் ஏற்றுக்கொண்டுள்ளதால் இந்த புகாரின் அடிப்படையில் அவர்கள் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை அறிய அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.