1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 28 ஜூலை 2023 (17:46 IST)

நடிகையின் வீட்டில் திருடிய பணிப்பெண்.. மன்னிப்பு கேட்டதால் மீண்டும் வேலைக்கு சேர்த்து கொண்ட பெருந்தன்மை..!

theft
நடிகையின் வீட்டில் பணிப்பெண் பணம் திருடிய நிலையில் அவர் தன்னுடைய தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டதை எடுத்து மீண்டும் அவரை பணியில் சேர்த்துக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
கமல் ரஜினி உள்பட பல பிரபலங்களின் படங்களில் நடித்தவர் நடிகை ஷோபனா. இவர் தனது தாயாருடன் சென்னை தேனாம்பேட்டையில் தனது வீட்டில் வசித்து வருகிறார். 
 
இந்த நிலையில் ஷோபனா வீட்டில் பணிபுரிந்த விஜயா என்ற பணிப்பெண்  பணம் திருடியதாக தெரிகிறது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் பணத்தை திருடிடதை பணிப்பெண் விஜய் ஒப்புக்கொண்டார் 
 
இதனை அடுத்து அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று போலீசாரிடம் கேட்டுக் கொண்ட ஷோபனா மீண்டும் அவரை பணியில் சேர்த்துக் கொண்டதாகவும் திருடிய பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சம்பளத்தில் பிடித்துக் கொள்வதாக தெரிவித்துதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Mahendran