1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 29 ஜனவரி 2022 (23:48 IST)

தேங்காய் தொட்டி கரி தயாரிப்பு தொழிலால் விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதாக புகார்

காங்கேயத்தினை தொடர்ந்து கரூர் அருகே பெருகி வரும் தேங்காய் தொட்டி கரி தயாரிப்பு தொழில், ஏற்கனவே ஒரு ஆலையால் விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதாகவும், அருகில் உள்ள மக்கள் வாழமுடியவில்லை என்ற நிலையில் மீண்டும் ஒரு ஆலையினை துவக்க முயற்சித்த திமுக பிரமுகரால் கரூர் அருகே பரபரப்பு.
 
காங்கயம் சுற்றுப்பகுதி கிராமங்களில் பல்வேறு இடங்களில் தேங்காய் தொட்டியில் இருந்து "கரி' தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் ஏற்படும் புகையால், காற்று மாசுபட்டு சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்து  வந்த நிலையில், தற்போது கரூர் அருகேயும் இந்த ஆலைகள் அதிகரித்து வருவதாகவும், இதனால் விவசாய நிலங்கள் கெட்டுப்போவது மட்டுமில்லாமல், நிலத்தடி நீர் மட்டமும் பாதிக்கப்பட்டு வருகின்றதாகவும், ஏற்கனவே ஒரு தொழிற்சாலை இயங்கிய நிலையில் அதே பகுதியில் மீண்டும் ஒரு தொழிற்சாலை உருவாக்க முயற்சித்ததால் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.