திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 22 அக்டோபர் 2024 (11:27 IST)

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக வழக்கறிஞர்கள் அணியின் சார்பில் புகார்

கடந்த இரண்டு நாட்களாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்த்தாய் வாழ்த்தை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீக்கி விடுவோம் என்று பேசி வருகிறார் இந்த பேச்சு உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை புண்படுத்தும் வகையில் உள்ளது அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
 
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர்கள் பிரிவு தலைவர் சுரேஷ் பாபு தலைமையில் வழக்கறிஞர்கள் மற்றும் திமுக தொண்டர்கள்  திருச்செங்கோடு நகர காவல் ஆய்வாளர்  வெங்கட்ராமனிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
 
அந்த புகார் மனுவில் தமிழர்களின் மனதை புண்படும் வகையில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது இது குறித்து நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர்கள் அணியின் தலைவர் சுரேஷ் பாபு கூறும்போது கடந்த இரண்டு நாட்களாக தமிழ்த்தாய் வாழ்த்தை நான் ஆட்சிக்கு வந்தால் நீக்கி விடுவேன் என்று ஆணவமாக பேசியுள்ளார் இந்த நிலை நீடித்தால் நாளை தேசிய கீதத்தை நீக்கி விடுவேன் என்று கூறுவார் ஆகவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளோம். என்று கூறினார்.
 
இந்த நிகழ்வில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர்கள் மற்றும் திமுக தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.