1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 22 அக்டோபர் 2024 (10:17 IST)

ரூ.12 கோடி மோசடி.. பிரபல நடன இயக்குனர் மீது காவல்துறையில் புகார்..!

பிரபல நடன இயக்குனர் 12 கோடி ரூபாய் மோசடி செய்ததாக நடன கலைஞர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபுதேவா நடித்த ஏபிசிடி, சல்மான் கான் நடித்த ரேஸ் 3 உள்ளிட்ட பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியவர் ரெமோ டிசோசா. இவரது மனைவி உள்பட ஆறு பேர் 12 கோடி ரூபாய் மோசடி செய்ததாக நடன கலைஞர் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரில், சின்னத்திரை நடன நிகழ்ச்சிகளில் எங்கள் குழு வெற்றி பெற்ற நிலையில், ரெமோ டிசோசா அதை அவரது குழுவாக காட்டி பரிசு பணத்தை மோசடி செய்துவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் செய்யப்பட்டுள்ளது.

இந்த புகார் குறித்து ரெமோ டிசோசா மனைவி தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, “மோசடி புகார் அளிக்கப்பட்டு இருப்பது பற்றிய செய்திகளை ஊடகங்கள் மூலம் அறிந்தேன். உண்மை தெரியாமல் ஊடகங்களில் வதந்தி பரப்புவதை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தரப்பில் விளக்கத்தை சரியான நேரத்தில் முன்வைப்போம்; விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவோம்,” என்று தெரிவித்துள்ளார்.


Edited by Mahendran