திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : சனி, 19 அக்டோபர் 2024 (16:33 IST)

முன்னாள் எம்.எல்.ஏ.வின் மனைவி அளித்த புகார்: மத்திய அமைச்சரின் சகோதரர் கைது..!

Arrest
முன்னாள் எம்எல்ஏ மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய அமைச்சரின் சகோதரர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய நுகர்வோர் விவகாரத்துறை மற்றும் உணவுத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கர்நாடகாவை சேர்ந்தவர். இவரது சகோதரர் கோபால் ஜோஷி தேர்தலில் டிக்கெட் வாங்கி தருவதாக கூறி ரூபாய் 2 கோடி மோசடி செய்ததாக முன்னாள் எம்எல்ஏ தேவானந்த் பூல்சிங் என்பவரது மனைவி சுனிதா பெங்களூர் போலீசில் புகார் அளித்தார்.

 இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறை விசாரித்த நிலையில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் சகோதரர் கோபால் ஜோஷி மற்றும் சகோதரி ஆகிய இருவரும் கைது செய்ததாகவும் அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மத்திய அமைச்சரின் சகோதரர் ரூபாய் 2 கோடிக்கு மோசடி செய்திருப்பதாகவும் அதனால் கைது செய்திருப்பதாகவும் வெளிவந்திருக்கும் தகவல் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran