திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 12 மே 2019 (12:26 IST)

தினகரன் கட்சி ’ஒரு அழிவு சக்தி ’ - ஹெச். ராஜா டுவீட்

உலகில் மிகப்பெரிய ஜனநாயகத் தேர்தல் இந்தியாவில் நடைபெற்றுக்கொண்டுள்ளது.  ஐந்துகட்ட மக்களவைத் தேர்தல் முடிவுற்று தற்போது ஆறாம் கட்ட தேர்தல் நடைபெற்றுவருகிறது. தமிழகத்தில் கடந்த மாதம் 18 ஆம்தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தலுடன் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில் மே 19 ஆம் தேதி 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்க இருப்பதை முன்னிட்டு தமிழக அரசியல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது.
 
சட்டமன்ற இடைத்தேர்தலுக்குப் பிறகு திமுகவோடு இணைந்து அதிமுக ஆட்சியைக் கலைப்போம். ஆனால் திமுகவுக்கு ஆட்சியமைக்க ஆதரவு கொடுக்கமாட்டோம் என அமமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான தங்கத் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
 
இந்நிலையில் இது குறித்து அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ ‘ தங்க தமிழ்ச்செல்வன் தினகரனுக்கு பக்கத்தில் இருந்துகொண்டே அவருக்கு எதிரான செயலகளை செய்துகொண்டு இருக்கிறார். அவர் திமுகவுக்கு செல்ல இருக்கிறார் என்பதையே அவரது பேட்டிகள் உணர்த்துகின்றன. செந்தில் பாலாஜியைப் போல அவரும் திமுக நோக்கி செல்வார் என்றே நினைக்கிறேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் திமுக மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் கூட்டணி என்ற அதிமுகவின் குற்றச்சாட்டுக்கு டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.  அதில் ‘ தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணையப்போவதாக சொல்கிறார்கள். அவர் வெளிப்படையாகத்தான் கூறியிருக்கிறார். எங்களிடம் தற்போது நான்கு எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற பின் திமுகவோடு இணைந்துதான் ஆட்சியைக் கவிழ்க்க முடியும். துரோகத்தை ஒழிக்க அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களும் ஒன்றுசேருவார்கள். இதில் என்ன கூட்டணி இருக்கிறது ?’ எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
 
இந்நிலையில் தற்போது ஹெச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் 1998 மற்றும் 2004 ல் அ இ அதிமுக பாஜக உடன்ப் கூட்டணி வைத்தது. ஆனால் செல்வி ஜெயலலிதா அவர்கள் திமுக வுடன் என்றாவது கைகோர்த்தாரா. இன்று எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் நினைவிற்கு துரோகம் செய்கிறார் தினகரன். மேலும் SDPI யுடன் கூட்டணி வைத்து பயங்கரவாதத்தை வளர்க்கிறார். அமமுக ஒரு அழிவுசக்தி என்று தெரிவித்துள்ளார்.