ஹெல்மெட் அணியாமல் வந்த வாலிபரின் மண்டையை உடைத்ததாக புகார் !

chennai
sinoj kiyan| Last Modified புதன், 19 பிப்ரவரி 2020 (16:10 IST)

சென்னை ஓட்டேரியில் தலைக்கவசம் அணியாமல் சென்ற இளைஞர் ஒருவரை போலீஸார் லத்தியால் அடித்து மண்டையை உடைத்ததாக பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை ஓட்டேரியில் இருசக்கர வாகனத்தில் சென்ற
சுரேந்தர் என்ற 19 வாலிபர் தலைக்கவசம் அணியாமல் வந்தபோது, அவரை மடக்கிப் பிடித்த போலீஸார் அவருக்கு அபராதம் விதித்ததாகக் கூறப்படுகிறது.


அப்போது, சுரேந்தர் வாக்குவாதத்தில் ஈட்டுபட, ஆத்திரமடைந்த போலீஸார் லத்தியால் அவரை தாக்கினார். இதில், சுரேந்தருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.அங்கு அருகில் நின்றிருந்த மக்கள் போலீஸாரை மக்கள் தாக்க முயன்றுள்ளனர். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


இதில் மேலும் படிக்கவும் :