அதிவேகத்தில் வந்த பேருந்து மோதி கல்லூரி மாணவர்கள் பலி !

VIRUDHUNAGAR
Last Modified வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (17:18 IST)
விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் எனும் பகுதியில் அமைந்துள்ள ஒரு கிருஷ்ணன் கோவிலுக்கு அருகில் இரு கல்லூரி மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே அதிவேகத்தில் வந்த பேருந்து அவர்கள் மீது மோதியது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற பகுதியில் ஒரு கிருஷ்ணர் கோவிலுள்ளது. இந்தப் பகுதியைச் சேர்ந்த  கல்லூரி மாணவர்களான மணிகண்டன் மற்றும் மகாராஜன் இருவரும், அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்துவந்தனர்.
 
இந்நிலையில் இன்று கல்லூரி முடிந்த பிறகு, இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தனர். அப்போது அதிவேகத்தில் அந்த சாலையில் வந்த அரசுப்பேருந்து ஒன்று அவர்கள் மீது மீது மோதியது.  இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
 
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 


இதில் மேலும் படிக்கவும் :