ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 5 செப்டம்பர் 2019 (23:37 IST)

தமிழகத்தில் பாஜகவை வளர்த்து வருகிறதா திமுக?

தமிழகத்தில் பாஜகவை காலூன்ற விட மாட்டோம் என்றும் பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் ‘கோபேக் மோடி’ என்று கருப்புக்கொடி காட்டியும் ஆர்ப்பாட்டம் செய்து வரும் திமுக, தனக்கும் தெரியாமல் பாஜகவை வளர்த்து வருகிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
 
இதுவரை தமிழக அரசியல் களம் என்றாலே கடந்த 50 வருடங்களாக அதிமுக vs திமுக என்றே உள்ளது. இதனால்தான் விஜயகாந்த் கட்சி உள்பட எந்த கட்சியும் தனித்து போட்டியிட முடியாமல் இந்த இரு கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைத்து வருகிறது. இதற்கு தேசிய கட்சிகளும் விதிவிலக்கல்ல. அப்படியே தனித்து நிற்கும் கட்சிகள் 234 தொகுதிகளிலும் டெபாசிட் கூட வாங்க முடியாத நிலையே உள்ளது
 
 
இந்த நிலையில் தற்போது திமுக பெரும்பாலான நேரங்களில் அதிமுகவை எதிர்ப்பதற்கு பதிலாக பாஜகவை எதிர்த்து அரசியல் செய்து வருகிறது. காஷ்மீர் பிரச்சனை உள்பட பல்வேறு பிரச்சனைகளில் பாஜகவை எதிர்த்து அரசியல் செய்து வருவதால் அதிமுக ஆட்டத்திலேயே இல்லை என்பதுபோல் மக்களை நினைக்க வைப்பது திமுக தான். இதேரீதியில் சென்றால் இன்னும் சில வருடங்களில் திமுகவா? பாஜகவா? என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டால் அதற்கு முழு பொறுப்பும் திமுக தான் என்பது குறிப்பிடத்தக்கது