ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 5 ஜூலை 2024 (13:01 IST)

அனைத்து மக்கள் நீதி கட்சியின் சார்பில் தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்!

மதுரை அண்ணா பேருந்து நிலையம் பகுதியில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகில் அனைத்து மக்கள் நீதி கட்சியின் சார்பில் இளைய தலைமுறை வளர்ச்சியை சீரழித்து உயிர்கொல்லி நோயை உண்டாக்கி மக்களின் வாழ்க்கையும்  வாழ்வாதாரத்தையும்  கேள்விக்குறியாக்கும் (டாஸ்மார்க்)மது கடைகளை மூடவலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 
 
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து மக்கள் நீதிக்கட்சியின் மாவட்ட தலைவர் ரைட் சுரேஸ் தலைமையிலும் அனைத்துமக்கள் நீதிக்கட்சியின் நிறுவனர் யோசன்,தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனர் திருமாறன் ஜி, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் செயலாளர் வேலுச்சாமி தமிழ்நாடு  மண்ணுரிமைக் கட்சி முகமது தாரிக்,  ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
 
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கள்ளச் சாராயத்தையும் டாஸ்மாக் கடையையும் நிரந்தரமாக மூடக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
 
இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் சமுதாய அமைப்பினர் சமூக ஆர்வலர்கள்  பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்