வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 19 ஜூலை 2022 (15:37 IST)

மாணவி மரணத்திற்கு நீதி: வாட்ஸ் அப் குழு உருவாக்கிய மாணவர் கைது!

arrest
கள்ளக்குறிச்சி மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு வாட்ஸ் அப் குழு உருவாக்கிய மாணவர் கைது செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
 
கள்ளக்குறிச்சி அருகே உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் அவரது மரணத்திற்கு நீதி கேட்டு மாணவ மாணவிகள் தமிழகம் முழுவதும் போராடி வருகின்றனர்
 
இந்த நிலையில் கடலூர் வெள்ளி கடற்கரையில் போராட்டம் நடத்த வாட்ஸ்அப் குழு உருவாக்கிய விஜய் என்ற கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர் 
 
வாட்ஸ்அப் குழு மூலம் கடலூர் வெள்ளி கடற்கரை அனைவரும் குவிந்து போராட வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. அவருடன் சேர்த்து தினேஷ், கார்த்திக் ஆகிய இளைஞர்களையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது