உள்ளாட்சி தேர்தல் - கல்லூரிகளுக்கு விடுமுறை!
உள்ளாட்சி தேர்தலையொட்டி நாளை மற்றும் 9 ஆம் தேதி பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் விடுமுறை.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற உள்ளது. அதேசமயம் மற்ற 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி பகுதிகளில் இடைதேர்தலும் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் இன்று 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் பொது விடுமுறையை தமிழக அரசு அறிவித்தது. இதனைத்தொடர்ந்து வேலூர், ராணிப்பேட்டை. திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் நான்கு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதனோடு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் இந்த 9 மாவட்டங்களில் உள்ள வங்கிகளுக்கு நாளை (6 ஆம் தேதி) மற்றும் 9 ஆம் தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது உள்ளாட்சி தேர்தலையொட்டி நாளை மற்றும் 9 ஆம் தேதி பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் விடுமுறை அறிவித்துள்ளது. பல்கலைக்கழகம், வளாக கல்லூரிகள், இணைப்பு கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.