வியாழன், 29 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

நீட் தேர்வு மையம் தெரியாமல் தவித்த மாணவருக்கு உதவிய கலெக்டர்!

நீட் தேர்வு மையம் தெரியாமல் தவித்த மாணவருக்கு உதவிய கலெக்டர்!
நீட் தேர்வு மையம் தெரியாமல் தவித்த மாணவருக்கு உதவிய கலெக்டர்!
நீட் தேர்வு மையம் எங்கே உள்ளது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த மாணவர் ஒருவருக்கு திருப்பத்தூர் கலெக்டர் உதவி செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நேற்று தமிழகம் முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது என்பதும் இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர் என்றும் குறிப்பிடப்பட்டது. இந்த நிலையில்  திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வேடியப்பன் என்ற மாணவர் ஏலகிரியில் உள்ள கல்லூரி ஒன்றில் நீட் தேர்வு எழுதுவதற்காக வந்திருந்தார் 
 
ஆனால் அவருக்கு கல்லூரி மையத்துக்கு செல்வது எப்படி என்பது தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த திருப்பத்தூர் கலெக்டர் அமர் குஷ்வாஹா என்பவர் அந்த மாணவரிடம் விசாரித்தார். அப்போது தான் நீட் தேர்வு எழுத வந்திருப்பதாகவும் நீட் தேர்வு மையம் எங்கே உள்ளது என்று தெரியவில்லை என்றும் கூறினார் 
 
இதனையடுத்து நீட் தேர்வு மையத்திற்குள் நுழைய ஒரு சில நிமிடங்களே இருந்த போது மாணவர்கள் கலெக்டர் தனது காரிலேயே அந்த மாணவரை அழைத்து நீட் தேர்வு மையத்துக்கு அழைத்துச் சென்று அவரை டிராப் செய்தார். இதனால் சரியான நேரத்திற்கு மாணவர் நீட் தேர்வு மையத்துக்கு செல்ல முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மாணவருக்கு உதவி செய்த கலெக்டருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது