1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (15:02 IST)

கடும் கெடுபிடிகளுடன் நீட் தேர்வு தொடங்கியது!

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கபட்டுள்ள நிலையில் சற்று முன்னர் நீட் தேர்வு தொடங்கியது
 
காலை 11:30 மணி முதல் 1.30 மணி வரை நீட் தேர்வு மையத்திற்குள் மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் 1.30 மணிக்கு மேல் வரும் மாணவர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்பதும் கடும் கெடுபிடிகளுடன் அவர்கள் சோதனை செய்யப் பட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டது 
 
இந்த நடைமுறைகள் முடிந்து தற்போது நீட்தேர்வு சற்றுமுன்னர் தொடங்கியுள்ளது மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் தேர்வு எழுதி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன இந்த ஆண்டு நீட் தேர்வில் கேள்விகள் எப்படி உள்ளது என்பது பற்றி அவன் இன்னும் அரைமணி நேரத்தில் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது