நீட் சோகம்: 4 நிமிடங்கள் தாமதமாக வந்த மாணவரை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்
நீட் சோகம்: 4 நிமிடங்கள் தாமதமாக வந்த மாணவரை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்
தமிழகம் முழுவதும் இன்று இரண்டு மணிக்கு நீட்தேர்வு ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சில நிமிடங்கள் தாமதமாக வந்த மாணவனை நீட் தேர்வு கண்காணிப்பு அதிகாரிகள் வெளியே அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் 11.30 மணி முதல் 01.30 மணிக்குள் நீட் தேர்வு மையத்திற்குள் வர வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சரியாக 01.34 மணிக்கு அதாவது நான்கு நிமிடம் தாமதமாக வந்த மாணவர் ஒருவரை நீட் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்க முடியாது என அதிகாரிகள் கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கடந்த ஒரு வருடமாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்த அந்த நாம் மாணவர் 4 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் நீட் தேர்வு எழுத முடியாமல் சோகமாக திரும்பிச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீட் தேர்வை எழுத அனுமதிக்கப்படாத மாணவரின் பெற்றோர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன