செவ்வாய், 27 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 30 டிசம்பர் 2021 (09:34 IST)

உதயநிதியின் பெயரில் புதிய தெரு! – வைரலாகும் போஸ்டர்!

உதயநிதியின் பெயரில் புதிய தெரு! – வைரலாகும் போஸ்டர்!
கோவை அருகே திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி பெயர் தெரு ஒன்றிற்கு வைக்கப்பட்டுள்ளது வைரலாகியுள்ளது.

திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். இந்நிலையில் உதயநிதி அமைச்சர் பதவி, துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் போன்ற ஆதரவு குரல்கள் திமுகவிற்குள் ஒலிக்க தொடங்கியுள்ளது.

குறுகிய காலத்தில் அரசியலில் பிரபலமான உதயநிதியின் பெயரில் கோவை அருகே ஒரு தெருவே உள்ளது வைரலாகியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் தோலம்பாளையம் ஊராட்சியில் உள்ள சீங்குளி என்ற பகுதியில் உதயா நகர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. உதயநிதி பெயர் சூட்டப்பட்ட முதல் பகுதி இது என்றும் கூறப்படும் நிலையில் இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.