படிச்சது ப்ளஸ்டூ; உத்தியோகமோ டாக்டர்! – போலி ஆசாமி கைது!
திருவள்ளூர் அருகே மருத்துவம் படிக்காமலே டாகடர் என பொய் சொல்லி கிளினிக் நடத்தி வந்த ஆசாமி கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்தவர் வேளாங்கண்ணி. ப்ளஸ்டூ வரை மட்டுமே படித்த வேளாங்கண்ணி கடந்த 3 ஆண்டுகளாக தான் ஒரு டாக்டர் என கூறிக்கொண்டு அந்த பகுதியில் ஒரு கிளினிக் வைத்து நடத்தி வந்துள்ளார்.
மருத்துவ அதிகாரிகள் சோதனை செய்தபோது அவரிடம் மருத்துவ படிப்பு சான்றிதழ் இல்லாததும், கிளினிக் மருத்துவ சான்று பெறாததும் தெரிய வந்தது. அதை தொடர்ந்து போலீஸ் வேளாங்கண்ணியை கைது செய்து சிறையிலடைத்தனர்.
ப்ளஸ்டூ படித்த நபர் டாக்டர் என்று ஏமாற்றி மருத்துவம் பார்த்த சம்பவம் திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.