கிணற்றுக்கு அருகே செல்பி: விபரீதத்தில் முடிந்த காதலர்கள் ஆசை!

kinaru
Prasanth Karthick| Last Modified திங்கள், 4 நவம்பர் 2019 (19:55 IST)
சென்னை அருகே இளம் ஜோடி கிணற்றுக்கு அருகே செல்பி எடுக்க முயற்சித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் ஆவடி அருகே உள்ள மிட்டனமல்லி கண்டிகை பகுதியை சேர்ந்த இளைஞர் அப்பு. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஸ்டெஃபி என்ற பெண்ணுக்கும் கடந்த வாரம் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெற இருந்த சூழலில் இளம் ஜோடிகள் அருகிலுள்ள விவசாய பகுதியை சுற்றி வந்திருக்கிறார்கள்.

அப்போது அங்கிருந்த விவசாய கிணற்றின் அருகே இருவரும் செல்பி எடுத்து கொள்ள முயற்சித்திருக்கிறார்கள். அப்போது தவறி காதலர்கள் உள்ளே விழுந்திருக்கிறார்கள். விழும்போது தலையில் அடிப்பட்ட ஸ்டெஃபி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். அப்புவை அந்த பக்கமாக சென்ற விவசாயி ஒருவர் தண்ணீரில் குதித்து காப்பாற்றியுள்ளார்.

இன்னும் சில நாட்களில் திருமணம் ஆக வேண்டிய சூழலில் இளம் ஜோடிக்கு நேர்ந்த சோக சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :