வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 3 மே 2021 (09:12 IST)

178 தொகுதிகளில் மூன்றாம் இடம்… ஆனால் ஒரு வெற்றி கூட இல்லை… நாம் தமிழர்!

தமிழக தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்திய நாம் தமிழர் கட்சி 178 இடங்களில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை 110 தொகுதிகளுக்கான முன்னணி நிலவரங்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒரு தொகுதியில் கூட நாம் தமிழர் கட்சி முன்னணி பெறவில்லை. இத்தனைக்கும் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் வேட்பாளர்களைக் களமிறக்கியது. வேட்பாளர்களில் 50 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பளித்தது போன்ற செயல்களால் இணையத்தில் பரவலாக கவனம் பெற்றது. ஆனால் மக்கள் நீதிமய்யம், பாஜக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் கூட ஒரு சில தொகுதிகளில் முன்னிலைப் பெற்ற நிலையில் நாம் தமிழர் இன்னும் ஒரு தொகுதியில் கூட முன்னிலைப் பெறவில்லை.

ஆனால் அந்த கட்சியினரின் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக அவர்கள் 6 சதவீதத்துக்கும் மேலாக வாக்குகளை பெற்றுள்ளனர். அதுமட்டுமில்லாமல் 178 தொகுதிகளில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளனர். ஆனால் அந்த கட்சியின் சீமான் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோல்வி அடைந்திருப்பது மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.