1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Coimbatore ajith fans complaint ticket price

வலிமை பட டிக்கெட் அதிக விலைக்கு விற்பனை! – அஜித் ரசிகர்கள் புகார்!

Cinema
அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அதன் டிக்கெட்டை அதிக விலைக்கு விற்பதாக ரசிகர்கள் புகார் அளித்துள்ளனர்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள திரைப்படம் வலிமை. போனிக்கபூர் இயக்கியுள்ள இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. அஜித் படம் நீண்ட நாட்கள் கழித்து வெளியாவதால் இதை காண ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் கோயம்புத்தூரில் திரையரங்குகளில் வலிமை படத்தின் டிக்கெட் அதிக விலைக்கு விற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கோவை அஜித் ரசிகர்கள் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
கொரோனா தொற்றைக் குறைக்க இதுதான் 'வலிமை'யான வழிமுறை