1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 30 டிசம்பர் 2021 (12:00 IST)

என்னோட அடுத்த டார்கெட் மகாபாரதம்தான்..! – ராஜமௌலியின் மெகா ப்ளான்!

ஆர்.ஆர்.ஆர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ராஜமௌலி மகாபாரதத்தை படமாக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் ஆகியோர் நடித்து உருவாகியுள்ள படம் ஆர்.ஆர்.ஆர். தமிழ், தெலுங்கி, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படம் பல மொழிகளிலும் வெளியாவதால் ப்ரோமோசன் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் ப்ரமோசன் விழாவில் பேசிய இயக்குனர் ராஜமௌலி தான் மகாபாரத்தத்தை படமாக எடுக்க திட்டமிட்டிருப்பதாக கூறியுள்ளார். 10 மாதங்களில் மகாபாரதம் படத்தின் பணிகள் தொடங்கும் என்றும், அதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோருக்கும் கூட கதாப்பாத்திரங்கள் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.