வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (16:42 IST)

’அதிமுக - பாமக’ பணத்துக்காக சேர்ந்த கூட்டணி - ஸ்டாலின் பாய்ச்சல்...

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள  40 தொகுதிகளிலும் ஜெயிக்க வேண்டும் என அதிமுக, திமுக ஆகிய பிரதான கட்சிகள் போட்டா போட்டி போட்டு கூட்டணி பேரம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் அதிமுக சட்டென முடிவுக்கு வந்து இன்று பாமகவுடன் தன் கூட்டணி டீலிங்கை முடித்துள்ளது. சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற்ற இதுகுறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழகம் புதுச்சேரியில் உள்ள 40 பாராளூமன்ற தொகுதியில் பாமக வுக்கு 7 தொகுதிகளும், ராஜ்யசபாவில் 1 சீட்டு, 7பேர் விடுதலை என்ற ஒப்பந்தத்தை முடிவு செய்துள்ளனர்.
 
இந்நிலையில் வேலூர் அருகே ஆம்பூரில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில்  ஸ்டாலின் பேசியதாவது:
 
பணத்துக்காக இணைந்துள்ள கூட்டணிதான் அதிமுக - பாமக இடையேயான கூட்டணி ஆகும்.மக்களின் நலனுக்காக இல்லாமல் பணத்துக்காக சேர்ந்துள்ள கூட்டணி அது.ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வத்தை விமர்சித்தவர் ராமதாஸ். அதிமுகவின் கதை என்ற பெயரில் அரசை விமர்சித்து அண்மையில்தான் புத்தகம் வெளியிட்டவர் அதே கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார். 
 
7 மக்களவைத் தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் மட்டுமின்றி வேறு எதோகூட இதன் பின்னணியில்  உள்ளது. தமிழக மக்களைப் பற்றி கவலைப்படாமல் பணத்துக்காக அதிமுகவுடன் கூட்டணி  அமைத்துள்ளதாக  அதிமுகவுடான பாமகவின் கூட்டணி பற்றி ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் தெரிவித்தார்.