தேமுதிகவுடன் கூட்டணி பேச்சை முடிக்க அதிமுக ஆயத்தம்...

vijayakanth
Last Modified செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (13:21 IST)
இன்று காலை அதிமுக - பாமக உடனான கூட்டணி பேச்சு வார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு சுபமாய் முடிந்த நிலையில் அடுத்தகட்டமாக அதிமுக தேமுதிகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக ராஜதந்திரமாக செயல்பட்டு எப்படியாவதும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
 
தற்போது அதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ்கோயல் தமிழகம் வந்துள்ளார். இன்னும் சிறிது நேரத்தில் கூட்டணி பேச்சு வார்த்தை தொடங்க உள்ளது.இதில் அதிமுக பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
admk
இந்நிலையில் இன்று மாலைக்குள்ளாக தேமுதிகவுடனான கூட்டணி ஒப்பந்தத்தை அதிமுக தலைமை முடிவு செய்துவிடும் என்று, அதற்கான அறிவிப்புகள் இன்று மாலை வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகின்றன.


இதில் மேலும் படிக்கவும் :