1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cm vijay has changed the compaing place

மதுராந்தகம் இடைத்தேர்தல்!. பிரச்சார இடத்தை மாற்றிய விஜய்!.. காரணம் என்ன?..

vijay
தமிழகத்தில் தவெக அரசு அமைந்தவுடன் 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் 25 பேர் தவெக கட்சிக்கு ஆதரவாக சட்டசபையில் வாக்களித்தனர். அதேபோல் அதிமுக எம்.எல்.ஏக்கள் 7 பேர் தங்களின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துவிட்டனர். எனவே அந்த ஏழு தொகுதிகளும் தற்போது காலியாக இருக்கிறது.

அதில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. வருகிற அக்டோபர் 6ம் தேதி அந்த இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. அந்த இரண்டு தொகுதிகளிலும் வென்று விட வேண்டும் என தவெக நினைக்கிறது. அந்த தொகுதியில் ஏற்கனவே அதிமுக சார்பில் போட்டியிட்டு பதவியை ராஜினாமா செய்த இரண்டு வேட்பாளர்களுக்கும் தற்போது தவெக சார்பில் விசில் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்..

ஒருபக்கம், மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளரை ஆதரித்து வருகிற 25ம் தேதி அச்சரப்பாக்கத்தில் முதல்வர் விஜய் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிக்கிறார். ஆனால் தற்போது பிரச்சார இடம் மாற்றப்பட்டிருக்கிறது. ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு விஜய் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது. ஜேசிபி எந்திரம் மூலம் அந்த இடத்தை சுத்தம் செய்யும் பணிகள் தற்போது அங்கு தொடங்கப்பட்டிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
எல்லாரும் விளையாடணும்!. விஜய் லண்டன் போனது இதுக்குதான்!.. ஆதவ் அர்ஜுனா விளக்கம்!...